அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமு
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சிவாகாமி
அருள்வாமி அபிராமியே!
- அபிராமி பட்டர்
No comments:
Post a Comment