Tuesday, July 20, 2010

ஜுலை 20, 2010 ராசி பலன்

ஜுலை 20, 2010 ராசி பலன்


மேஷம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். ஆடை ஆபரணம் சேரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனப்பழுது நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைசுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்: எதிர்பார்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்: தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். முகப்பொலிவு கூடும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். முன் கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். கை, கால் வலி வந்து போகும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். திடீர் பண வரவு உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடிவருவார்கள். இனிமையான நாள்.

மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

கும்பம்: கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரதில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள்.

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

Friday, July 16, 2010

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமு
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சிவாகாமி
அருள்வாமி அபிராமியே!

- அபிராமி பட்டர்

Thursday, July 1, 2010

ஒன்பதாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

ஒன்பதாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

பாக்கியஸ்தானம் எனப்படும் சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5-ஆம் பாவமே 9-ஆம் பாவம். தான தருமம் செய்யும் குணம், திருக்கோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருதாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்தல் போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் தன்மை, ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் நிலை, அங்கு பெறும் பணி, தொழில்கள் அவைகளால் பெறும் லாப நஷ்டம், நன்றியுணர்வு, இவைகளை தெரிவிக்கும் பாவம்.

தர்மம் என்பது கேட்டுக்கொடுப்பது, தானம் என்பது கேட்காமலே கொடுப்பது. அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.

தானத்திலே சிறந்தது அன்ன தானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தான தர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவரா, ஜீவ காருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

எட்டாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

எட்டாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள் - அவைகளால் ஏற்படும் மன சஞ்சலம், நீங்காத பகைகளால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்யத்தகாத காரியங்களைச்செய்தல் அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் - மரணம் ஏற்படும் நிலை இவைகளைத் தெரிவிக்கும் பாவம். தொழில் முறையில் 10 ஆம் பாவத்திற்கு 11 ஆம் பாவமே எட்டாம் பாவமாகும். இதனால் தொழில் லாபம்/நஷ்டம் தரும் பாவமாகும். இதில் உள்ள கிரகங்களின் தசாபுக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஏழாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

ஏழாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியைப் பற்றியும், பெண்களுக்கு கணவரைப்பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி / கணவன் ஆயுள், சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் பெறும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், பொருட்களை வாங்கி விற்கும் கமிஷன் / புரோக்கர் தொழில், தரகு வியாபாரம், இவைகளை குறிக்கும். குறிப்பாக களத்திரஸ்தானம் எனப்படும்.

ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

ஒருவருக்கு ஏற்படும் வியாதி அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள் அதனால் அடையும் துன்பம், பாம்புகளால் விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம் அதிகமாதல், ஒருவரை துவேசித்தல், பாவமான காரியங்களை செய்வது, வைசூரி நோய், சிறைப்படுதல், அதிகாரம் செய்யும் பணியில் அமர்வது, கால்நடைகளைப்பற்றிய செய்திகளை அறிதல் இவைகளையெல்லாம் தெரிவிக்கும் பாவமாகும்.

ஐந்தாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம், பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர்கல்வி பெறும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, இனிமையாக பேசுவது, மந்திர உபதேசம் செய்தல், ஆலோசனை கூறுதல் போன்றவற்றை தெரிவிக்கும் பாவம்.

சிறப்பாக புத்திரபாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும் குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தையும் அறியலாம்.

புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை, மந்திரங்கள் கற்பது, மந்திரங்களை உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொழிவாற்றும் தகுதி, கதாகாலட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

நான்காம் பாவம் குறிக்கும் காரகங்கள்

நான்காம் பாவம் குறிக்கும் காரகங்கள்

உயர் கல்வி, வாகனம், வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவினர் நிலை, அவர்களுடனான உறவு, புகழ் பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால், பால் பொருட்கள், பசு பண்ணை, திருத்தல் தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெறும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி இவைகளையும் பொதுவாக வீட்டைப்பற்றியும், சுகத்தைப்பற்றியும் தெரிவிக்கும் பாவமாகும்.

4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர்கல்வி பெறுவதை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகன, ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துக்கள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவைகளை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

மூன்றாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

மூன்றாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

எதிரியை வெற்றிகொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம் வெள்ளி,வைர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள் இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

இரண்டாம் பாவம் குறிக்கும் காரகங்கள்

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்திரனங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யுஞ்சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பது இதையும் குறிக்கும். முக்கியமாக தன ஸ்தானம் எனப்படும்.