Wednesday, June 30, 2010
லக்ன பாவ பலன்
உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் சக்தி, அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும், தலைப்பகுதியையும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப்பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகு. அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடம் ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதேபோன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை, நீண்ட ஆயுளை தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் அவசியம் தேவையே. செல்வம் இருந்தால் மட்டும் போதாது, அதை அனுபவிக்க உடல் நலமும் தேவையே. உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இவைகளுக்கு உதாரணமாக லக்ன பாவம் பலமாக அமைய வேண்டும்.
இரட்டைக் குழந்தை
5-7 ஆம் அதிபதிகள் சுபக்கிரஹங்களுடன் கூடி, சுபக்கிரஹங்கள் பார்க்க கேந்திரத்தில் இருக்க, அவர்களின் தசையில் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். ஆனால் இவைகளில் ஒன்று ஆட்சி பெறுமானால் இரட்டைக் குழந்தை பிறக்காது.
சந்திர லக்கினாதிபதி, அதாவது சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதியுடன் மூன்றாம் அதிபதி இணைந்து 3-ல் இருந்து ராகுவுடன் இணைந்தாலும், ராகு பார்த்தாலும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும். அவைகளில் ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் இருக்கும்.

Subscribe to:
Comments (Atom)